வழிமுறைகள் (INSTRUCTIONS)
- எட்டு வயது முதல் 80 வயதுக்கு மேல் வரை உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் எளிய முறை உடற்பயிற்சியை தொடங்கலாம்
- ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவேளை மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
- வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும்
- தரையில் பாய் அல்லது கனத்த விரிப்பு விரித்து அதன் மேல் நின்று உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
- கண்களை மூடிய நிலையில் அனைத்து பயிற்சிகளையும் செய்ய வேண்டும். விதிவிலக்காக, கீழ்கண்ட பயிற்சிகளை மட்டும் கண்களை இயல்பாக திறந்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
- கை பயிற்சி கடைசி நிலை 6
- கண் பயிற்சிகள் முழுவதும்
- மகராசனம் இரண்டாம் பகுதியில் கடைசி நிலை 7
- கண்களை மூடிய நிலையில் உடலில் எங்கு அசைவு நடைபெறுகிறதோ அங்கு மனதை செலுத்த வேண்டும்.
- அசைவுகள் நிதானமாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். எவ்வித அவசர அசைவுகளுக்கும் வேத உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் இப்பெயர்ச்சியில் வியர்வை வராது.
- எல்லா பயிற்சிகளையும் 30 நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.
- எல்லா பயிற்சிகளையும் செய்து முடித்த பிறகு சிறிதளவு தண்ணீர் அல்லது திரவ உணவு அருந்தலாம் பயிற்சி முடிந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு எந்த உணவும் உண்ணலாம்.
- மாலையில் பயிற்சி செய்வதாக இருந்தால் கடைசியாக சாப்பிட்டது கடின உணவானால் சாப்பிட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு பயிற்சிகளை செய்யலாம் கடைசியாக குடித்தது காபி தேநீர் முதலிய திரவம் உணவானால் குடித்த அரை மணி நேரத்திற்கு பிறகு பயிற்சிகளை செய்ய தொடங்க வேண்டும்.
- அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் கழித்து தான் இப்பயிற்சிகளை தொடங்க வேண்டும்.
- குடலிறக்கம், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், காது சம்பந்தப்பட்டப் நோய்கள் உள்ளவர்கள் கபாலபதி பயிற்சி செய்ய வேண்டாம். மற்ற எல்லாப் பயிற்சிகளையும் மெதுவாக செய்ய வேண்டும் .
- இதய நோய் உள்ளவர்கள் எளிய முறை கொண்டலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் ஆலோசனையை பெற்று அதன்படி பயிற்சிகளை செய்ய வேண்டும்
பெண்களுக்கு உரிய குறிப்புகள்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் இப்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.
- கருவுற்ற பெண்கள் கீழ்கண்ட பயிற்சிகளை செய்யக்கூடாது .
- மூச்சுப் பயிற்சிகளில் வஜ்ராசனத்தில் செய்யக்கூடிய நிலை 1&2 வேண்டாம்.
- மகராசனம் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் முழுவதும் வேண்டாம்.
மற்ற எல்லா பயிற்சிகளையும் பேறு காலம் வரையில் செய்யலாம்.
- உடல் நலம் சீராக இருந்தால் வேறு காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் கழிந்த பிறகு எல்லா பயிற்சிகளையும் செய்யலாம்.
- அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்திருந்தால் சிகிச்சை முடிந்த ஆறு மாதங்கள் கழித்து பயிற்சிகளை செய்யலாம்.